விதிமுறைகளை பின்பற்றாத 3 வங்கிகளுக்கு அபராதம்
ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில் காணப்பட்ட குறைபாடுகளை அடிப்படையாக கொண்டு 3 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி நிர்வாகம் அபராதம் விதித்து உள்ளது..
வங்கி கடன் வழங்குவதற்கான கடன் முறை வழிகாட்டுதல்கள் மற்றும் பிற சட்டப்பூர்வ கட்டுப்பாடுகள் தொடர்பான மீறல்களுக்காக கோடக் மஹிந்திரா வங்கிக்கு அதிகபட்சமாக ரூ.61.4 லட்சம் அபராதம் விதித்தது.
KYC விதிமுறைகளை பின்பற்றாததற்காக ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கிக்கு ரூ.38.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.29.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது







