கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் ஆஸ்கார் கல்லூரியின் சார்பாக சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்பட்டு, சாலை விழிப்புணர்வு குறித்த பேரணி நடைபெற்றது.
பேரணியை கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் .கிரிஜா கொடியசைத்து தொடக்கி வைத்தார். மோட்டார் வாகன அலுவலர் கவின்ராஜ் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கிடையே போக்குவரத்து விழ்ப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 15 நபர்களுக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் இலவசமாக தலைக்கவசம் வழங்கினார்.
இப்பேரணி பயணியர் விடுதியில் தொடங்கி பழைய பேருந்து நிலையம், பூங்கா வழியாக இனாம்மணியாச்சி சந்திப்பில் நிறைவு பெற்றது. பேரணியின் போது சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய பதாகைகள் ஏந்தி, சாலையில் பாதுகாப்பாக செல்வது பற்றியும் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டு பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
ஆஸ்கார் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் வினோத் , முதல்வர் பத்மாவதி அவர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.