இயற்கை வளங்கள் தொடர்ந்து கொள்ளை; டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது,
ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் இயற்கை வளங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தை திமுக அரசு பாலைவனமாக மாற்றி வருகிறது.
மேலும்,ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளுவது தொடர்பான அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நேரத்தில்,13 மணல் குவாரிகளை திறப்பதற்கு திமுக அரசு ஏன் நடவடிக்கை எடுத்து வருகிறது..இந்த திட்டத்தை கைவிடாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவது குறித்து எந்த கவலையும் இல்லாமல், கமிஷன், கலெக்ஷன், கரப்ஷனை மட்டுமே நோக்கமாகக் கொண்டு திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.
தந்தை பெரியார் பற்றி சீமான் இழிவாக பேசி வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “மறைந்த தலைவரின் புகழுக்கு இழுக்கு விளைவிக்க முயற்சிப்பது பண்பாடற்ற செயல் என்றும், தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என எவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் பொழுது, மறைந்த தலைவர்கள் பற்றி இழிவாக பேசுவது தமிழக ஆட்சி நிர்வாகம் மீதான கண்ணோட்டத்தை திசை திருப்பும் செயலோ என்று என்ன தோன்றுகிறது” என்று குறிப்பிட்டார்,
தொடர்ந்து டி.ஜெயக்குமார்,”கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் பயணித்த காரை வழிமறித்து தொந்தரவு செய்த குற்றவாளிகள் யார் என்பதை முழுமையாக விசாரித்து கைது செய்வதோடு மட்டுமல்லாமல், விரைவான நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
