• May 20, 2024

2-ந்தேதி கிராமசபை கூட்டம் இல்லை என்றால் புகார் தெரிவிக்கலாம்-தலைமை செயலாளர் இறையன்பு

 2-ந்தேதி கிராமசபை கூட்டம் இல்லை என்றால் புகார் தெரிவிக்கலாம்-தலைமை செயலாளர் இறையன்பு

தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு, அக்டோபர் 2-ந் தேதி நடக்கும் கிராமசபை கூட்டம் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
2.10.2022 அன்று அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.
*கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட வேண்டும் .

  • 2020 – 2021 மற்றும் 2021- 2022 கடந்த நிதியாண்டில் வரவு செலவுகளை ஊராட்சி அலுவலகத்தில் பிளக்ஸ் பேனர்கள் மூலம் நோட்டீஸ் மூலமும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
  • 500 பேர் கொண்ட கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் 100 நபருக்குமேல் கலந்து வேண்டும். குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு

*18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் கிராமத்தின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ தீர்மானம் ஏற்றவும்.

*உங்கள் ஊராட்சியில் எந்த நிமிடம் வரை கிராமசபை தகவல் தெரியவில்லை என்றாலும் கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு.

*கிராம சபை கூட்டத்தில் மக்கள் கலந்து கொள்வதை வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.

*ஊராட்சி மன்ற தலைவர் முன்கூட்டியே கிராம சபை பற்றி தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும் ஊராட்சி செயலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

*தமிழக அரசு கிராம சபை கூட்டம் தெரிவித்தும் நடத்தாத ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் அளிக்க வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கவும்.

*மாவட்ட ஆட்சியரிடம் கிராம சபை பற்றி புகார் பொதுமக்கள் தெரிவிக்க பட்டால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் அதிகாரம் பறிக்கப்படும்.

*கிராம மக்கள் சொல்லும் தீர்மானம் பஞ்சாயத்து தலைவரும் அதிகாரியோ நிராகரிக்க முடியாது தீர்மானம் சரி அல்லது தவறு முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. இதனை அறிந்து செயல்பட வேண்டுகிறேன்.

*கிராம சபை கூட்டம் இல்லை என்றால்உடனடியாக கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.
*உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.*

முதலமைச்சர் தனி பிரிவு – எண்
044 25672345 அல்லது 044 25672283

முதலமைச்சர் – எண்
+91 9443146857

தொலைநகல் – எண்
044 25670930 அல்லது 044 25671441

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *