கோவில்பட்டியில் வேடமணிந்த தசரா பக்தர்கள், பொதுமக்களிடம் காணிக்கை வசூல்
![கோவில்பட்டியில் வேடமணிந்த தசரா பக்தர்கள், பொதுமக்களிடம் காணிக்கை வசூல்](https://tn96news.com/wp-content/uploads/2022/09/download-3-7.jpg)
தூத்துக்குடிமாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நடந்து வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிசாசூரசம்காரம் வரும் 5-ந் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வேடமணிந்து ஊர்ஊராக சென்று உண்டியல் வசூல் செய்து கோவிலில் காணிக்கை செலுத்துவா்.
இந்த வகையில் ஆழ்வார்திருநகரி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளிகள், கூலி தொழிலாளிகள் என 50 பேர் அடங்கிய தசரா குழுவினர் குறவன்- குறத்தி, அம்மன், காளி போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்து கோவில்பட்டி நகரில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
வழிநெடுகிலும் பொதுமக்களிடம் அவர்கள் உண்டியல் வசூல் செய்தனர். இந்த குழுவினர் மந்திதோப்பு பகுதியில் தங்கி இருந்து கோவில்பட்டி நகரில் தினமும் பொதுமக்களிடம் உண்டியல் வசூல் செய்கின்றனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)