• May 9, 2024

தூத்துக்குடி மாவட்ட போக்குவரத்து போலீசாருக்கு சட்டையில் அணியும் நவீன கேமரா

 தூத்துக்குடி மாவட்ட போக்குவரத்து போலீசாருக்கு சட்டையில் அணியும் நவீன கேமரா

தூத்துக்குடி மாவட்ட போலீசாரின் பயன்பாட்டுக்கென தமிழக அரசு ரூ.1,34,000/- மதிப்புள்ள 6 சட்டையில் அணியும் புதிய நவீன ரக கேமராக்கள் மற்றும் சேமிப்பு கருவியை வழங்கியுள்ளது. இந்த கேமராக்களை போக்குவரத்து போலீசார் , தங்கள் சட்டையில் அணிந்து கொண்டு அவர்கள் தங்களது பணிகளை மேற்கொள்ளும்போது அந்த இடத்தில் நடைபெறும் சம்பவங்களை வீடியோ, ஆடியோ, புகைப்படம் ஆகியவற்றை பதிவு செய்யவும், பதிவு செய்தவற்றை சேமிக்கவும் வசதி உள்ளது.

இதை போலீசார் வாகன சோதனை, ரோந்து செல்லுதல், போக்குவரத்து சீர் செய்தல் போன்ற காவல்துறையின் பல்வேறு வகையான பணிகளுக்கும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இது காவல்துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேற்படி இந்த கேமராக்களை தூத்துக்குடி நகர போக்குவரத்து பிரிவு காவல் நிலையத்திற்கு 4 கேமராக்களும், கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு காவல் நிலையத்திற்கு ஒரு கேமாராவும், திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு காவல் நிலையத்திற்கு ஒரு கேமராவும் என மொத்தம் 6 கேமராக்களை ]மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் போக்குவரத்து பிரிவு காவலர்களுக்கு வழங்கி, இதன் செயல்பாடுகள் குறித்தும், அதனை பயன்படுத்தும் முறை பற்றியும் விளக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவுரைகள் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தொழில்நுட்ப பிரிவு காவல் ஆய்வளார் லதா, உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு, மத்தியபாகம் போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *