தூத்துக்குடி தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆலோசனை
![தூத்துக்குடி தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆலோசனை](https://tn96news.com/wp-content/uploads/2024/01/ee7e1308-76a3-4924-aa54-6bc3cb31d819-850x560.jpeg)
நாடாளுமன்ற தேர்தல் பணி தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தினமும் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளுடன் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் மற்றும் திமுக உயர்மட்ட குழுவினர் ஆலோசனை நடத்தி வருகிறர்கள்.
அந்த வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள், தூத்துக்குடி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர்களான அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் தலைமையில் கலந்து கொண்டனர். ‘
இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்றனர். சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், ஓட்டபிடாரம் ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அவர்களிடம் தொகுதி நிலவரம் குறித்து கே,என்,நேரு,ஏ.வ.வேலு,உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி மீண்டும் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்,
இந்த கூட்டத்தில் திமுக உயர்மட்ட குழுவினரும் கலந்து கொண்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)