கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு விருது; ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்
![கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு விருது; ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்](https://tn96news.com/wp-content/uploads/2024/01/kvpaward.jpg)
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மை குழு தலைவர்களுக்கான மாநாடு நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமை தாங்கினார். மாநாட்டின் போது கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளி மேலாண்மை குழுவிற்கான விருது மற்றும் பாராட்டு சான்றிதழை ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:-
மாணவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்திட காலை உணவு திட்டம் மதிய உணவு திட்டத்தை பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணித்திட வேண்டும். பள்ளிக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும், தரமான கல்வி வழங்குவற்கும் உதவி செய்திட வேண்டும்.
பாடப்புத்தகத்தோடு இல்லாமல் தினசரி செய்தித்தாள்களையும் புத்தகங்களையும் வாசித்தால் சிந்தனை அதிகரிக்கும். பேச்சாற்றல் வளரும்,தன்னம்பிக்கை பிறக்கும்
இவ்வாறு அவர்பேசினார்.
,மாநாட்டில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, பள்ளி மேலாண்மை குழு மாநில கருத்தாளர் ரத்தினவிஜயன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயபிரகாஷ் ராஜன், குருநாதன்,பிரபா குமார்,உதவி திட்ட அலுவலர் முனியசாமி மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், மேலாண்மை குழு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)