தேசிய தரைபந்து சாம்பியன்ஷிப் போட்டி; வெற்றி பெற்ற தமிழக அணி வீரர், வீராங்கனைகள்
கன்னியாகுமரியில் ஜனவரி 26,27,28.ஆகிய தினங்களில் 12,14,17,19 ஆகிய வயது பிரிவு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான 17 வது தேசிய தரைபந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.’
இப்போட்டிகளில் தூத்துக்குடி மாவட்ட தரைபந்து கழகத்தை சார்ந்த வீரர்கள் வீராங்கனைகள் தமிழக அணிக்காக பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு விளையாடினார்கள்.தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா,தெலுங்கானா,சட்டீஷ்கர்,சண்டிகர், அரியானா,டெல்லி,ஜம்மூ காஷ்மீர்,மஹாராஷ்டிரா ஆகிய மாநில வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள்.
இப்போட்டிகளில் தமிழக அணிகள் 19,12 வயது பிரிவு வீரர்கள்,14,12 வயது பிரிவு வீராங்கனைகள் முதலிடமும். 14 வயது பிரிவு வீரர்கள் இரண்டாம் இடமும். 17,19 வயது பிரிவு வீரர்கள்,வீராங்கனைகள் நான்காம் இடமும் பெற்றார்கள்.
தூத்துக்குடி மாவட்ட தரைபந்து கழக வீராங்கனை 14 வயது பிரிவு க.அர்ச்சனா சிறந்த கோல்கீப்பராகவும்,.க.அம்சகனி சிறந்த வீராங்கனை யாகவும், 17 வயது பிரிவு அ.சரவணன் சிறந்த வீரராகவும் தேர்வு செய்ய பட்டார்கள்.
தமிழ்நாடு 14 வயது பிரிவு வீரர்கள்,வீராங்கனைகள் அணிக்கு தூத்துக்குடி மாவட்ட தரைபந்து கழக செயலாளர் கி.வேல்முருகன் பயிற்சியாளராக செயல்பட்டார்.தேசிய போட்டிகளில் கலந்து கொண்ட வீரர்கள் வீராங்கனைகளை தூத்துக்குடி மாவட்ட தரைபந்து கழக தலைவர் டாக்டர்.வெங்கடேஷ் முதுநிலை துணைத் தலைவர் டாக்டர்.சீனி வாசகன், துணை தலைவர்கள் முனைவர் குரு சித்ர சண்முக பாரதி,டாக்டர்.பாலமுருகன்,உமா சங்கர்.பொருளாளர் பாலாஜி. துணை செயலாளர்கள் க.துரை (Ex. உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் குமார் முகேஷ்குமார்,உறுப்பினர்கள் பாலா கிருஷ்ணன், கண்ணன், ஜெகதீஷ்வரன், கார்த்திக் ராஜா,அருண்குமார்.பயிற்சியாளர்கள் ஜெய கணேஷ்,மகேஷ்குமார்,மணிகண்டன்,பெண்கள் அணி பயிற்சியாளர் துர்கை அம்மாள் மற்றும் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் வெற்றி பெற்ற வீரர்கள்,வீராங்கனைகளை வாழ்த்தி பாராட்டினார்கள்.