கோவில்பட்டியில் அதிமுக கள ஆய்வுக் கூட்டம்; தலைமைக்கழக நிர்வாகிகள் பங்கேற்பு
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக கள ஆய்வுக் கூட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் நடந்தது.வடக்கு மாவட்ட செயலாளர்,முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தலைமை தாங்கினார்.அதிமுக துணைப் பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன், அமைப்புச் செயலாளர் செம்மலை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஒவ்வொரு நகர,பேரூராட்சி,ஒன்றிய செயலாளர்களிடம் தனித்தனியாக தங்களது பகுதிகளில் செய்த பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
கூட்டத்தில்,முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம்,முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன்,சின்னப்பன் மாவட்ட அவைத் தலைவர் பெருமாள்,நகரச் செயலாளர் விஜயபாண்டியன்,ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி,அன்புராஜ்,அழகர்சாமி, செல்வக்குமார், வண்டானம் கருப்பசாமி, அனைத்துல எம்ஜிஆர் மன்ற தெய்வேந்திரன்,மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் பேச்சியம்மாள்,சத்யா,மாவட்ட இணைச்செயலாளர் முருகேஸ்வரி,வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர்,அமைப்புசாரா ஓட்டுநர் அணி லட்சுமணப்பெருமாள்,மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மாவதி,வழக்கறிஞர்கள் ஈஸ்வரமூர்த்தி,சங்கர்கணேஷ்,கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் போடுசாமி,ஜெ பேரவை மாவட்ட இணைச்செயலாளர் நீலகண்டன்,இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன்,நகர் மன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி,மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி அம்பிகைபாலன்,பேரூராட்சி செயலாளர் ராஜ்குமார், முத்துராஜ்,ஒன்றிய மாணவரணி செயலாளர் விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நத்தம் விசுவநாதன்
கூட்டத்தில் நத்தம் விசுவநாதன் பேசியதாவது:-
அதிமுக உறுப்பினர்களுக்கான உரிமைச்சீட்டுகள் அந்தந்த பகுதி ஒன்றிய செயலாளர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை மூலம் வழங்கப்பட்டுள்ள உரிமைச்சீட்டுகள் பதிவு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கு சென்றடைந்துள்ளதா என்பதை கண்டறிந்து, அது வரவில்லையென்றால், அதற்குரிய காரணங்களை அறிந்து உரிய நடவடிக்கை எடுத்து, கிடைக்காத உறுப்பினர்கள் உள்ளிட்ட 100 சதவீதம் உறுப்பினர் உரிமைச்சீட்டுகளை சென்றடைவதை உறுதி செய்வதே இந்த ஆய்வின் நோக்கம்.
இந்த பணிகளை நிறைவடைந்தவுடன் புதிதாக பூத் கிளை அமைக்க வேண்டும். தொடர்ந்து அமைப்பு ரீதியாக சில மாற்றங்களை செய்ய வேண்டுமென பொதுச்செயலாளர் விரும்புகிறார். இதே போல் வாக்குச்சாவடி முகவர்கள் 45 வயதுக்கு உட்பட்டவராக தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வாக்குச்சாவடியை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
செம்மலை
அமைப்புச் செயலாளர் செம்மலை பேசியதாவது:-
உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை மற்ற மாவட்டங்களை விட அதிகளவில் அதிமுகவை சேர்ந்தவர்கள் உள்ளாட்சி தலைவர்களாக பெற்றுள்ள மாவட்டமாக உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரமாக இருக்கும்.
ஆளும்கட்சி கட்டுக்கட்டாக பணத்தை வைத்து கொண்டு, அதனை நம்பி தேர்தல் சந்திக்கிறது. ஆனால், அதிமுக கட்டமைப்புகளை கொண்டு தேர்தலை சந்திக்க உள்ளது. எப்படி ராமாயணத்தில் ராமனுக்கு லட்சுமணன் உதவியாக இருந்து, ராமனுடைய பட்டாபிஷேகத்தை நோக்கமாக இறுதி வரை துணையாக இருந்து நிறைவேற்றினாரோ, அதிமுக நிர்வாகிகள் 2026 தேர்தல் என்ற இலக்கை நோக்கி செயல்பட வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் செயலாற்ற வேண்டும். அதற்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உறுதுணையாக இருந்து அவரை முதலமைச்சராக்க வேண்டும்.
2026 தேர்தலில் எதிர்கட்சி வரிசையில் கூட இல்லாத அளவுக்கு 3-வது இடத்துக்கு தள்ள வேண்டும். இந்த ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு வந்தால் தான் தங்களது பிரச்சினைகள் தீரும் என அரசு அலுவலர்கள் கூறுகின்றனர். தொழிலாளர்கள் பிரச்சினைகள் தீரவில்லை என்பதால் அவர்களும் திமுகவுக்கு எதிராக உள்ளனர். இதனை அதிமுகவுக்கு சாதகமாக்கி களப்பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கடம்பூர் ராஜூ
கூட்டத்தில் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-
திமுக ஆட்சி மக்களால் வெறுக்கப்படும் ஆட்சியாக உள்ளது. திமுக ஆட்சி குறைகளைப் பற்றி நாம் பேசி வந்த நிலையில் தற்போது மக்கள் குறை கூறி வருகின்றனர்.எப்போது தேர்தல் வரும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதிமுகவை தேர்தலுக்கு தயாராகும் படி மக்கள் சொல்லும் நிலைமை உள்ளது. தமிழகத்தில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதால் இன்றைக்கு திமுக கூட்டணி கட்சிகளை கெஞ்சி வருகிறது.
அதிமுக கள ஆய்வு பணிகளை கலவரப் பணிகள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார். தூத்துக்குடியில் கள ஆய்வு பணி மேற்கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாதியிலே முடித்துக் கொண்டது போனது ஏன்? தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இல்லாமல் ஆய்வு பணி நடத்தியது,
தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள் நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பதவியில் இருக்கும் திமுக நிர்வாகிகளுக்கு எதிராகவே இன்றைக்கு திமுகவினர் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். நெல்லை கோவையில் திமுக நிறுத்திய மேயர் வேட்பாளர்களுக்கு எதிராகவே திமுகவினர் போட்டியிட்டதை பார்க்க முடிந்தது. திமுகவின் உள்கட்சி பிரச்சனையால் கதை கந்தலாகி வருகிறது.
,இவ்வாறு கடம்பூர் ராஜு பேசினார்.