• April 19, 2025

மதுரை மேலூர் டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: விவசாயிகள் போராட்டம் வாபஸ்

 மதுரை மேலூர் டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: விவசாயிகள் போராட்டம் வாபஸ்

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அரிட்டாபட்டி கிராமத்தில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைய உள்ளதாக மத்திய சுரங்க அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கான ஏலத்தை வேதாந்தா நிறுவனம் எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், சுரங்கத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பம் செய்யப்பட்டால் ஏற்க மாட்டோம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு வழங்கியுள்ள உரிமத்தை ரத்து செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதனிடையே சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலூர் பேருந்து நிலையம் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்,

அவர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும், இந்த திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் உறுதியளித்தார்.

இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள், பொதுமக்களிடம்  கலெக்டர் சங்கீதாவும், அமைச்சர் மூர்த்தியும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுரங்கம் அமையாது என அமைச்சர் உறுதியளித்ததை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெறுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *