• April 3, 2025

இளைஞர்களுக்கான வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு தொடர்பான கருத்தரங்கம்

 இளைஞர்களுக்கான வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு தொடர்பான கருத்தரங்கம்

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி, பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் கருத்துக்களை பல்வேறு நிகழ்வுகள் மூலம் பரப்புரை செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக 17 முதல் 22 வயதுவரை உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டினை ஜூன் மாதம் கோவையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் இளைஞர்கள் வானவியல் குறித்த ஆய்வுக் கட்டுரைகள், போஸ்டர்கள் தயாரிப்பு, குறும்படம் தயாரிப்பு, போட்டோகிராபி, புதுமையான விளையாட்டுக்கள் உருவாக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்கலாம்.

வானவியல் மாநாடு தொடர்பாக  மாநில அளவிலான கருத்தரங்கம் திருச்சியில் நடைபெற்றது. தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநிலத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். ராமன் ரிச்சர்ச் பவுண்டேசன் தலைவர் ரவிச்சந்திரன், மாநில ஒருங்கிணைப்பாளர் உதயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருச்சி அஸ்ட்ரோ கிளப் செயலாளர் உமா அனைவரையும் வரவேற்றார். `டாஸ்’ மாநில பொதுச் செயலாளர் மனோகர் வானவியல் மாநாடு குறித்து நோக்கவுரையாற்றினார்.

பேராசிரியர்கள் ரவிக்குமார், ஜோஸ்பின் பிரபா, நாச்சியப்ப சுவாமிகள் கல்லூரியின் முதல்வர் சந்திரமோகன், சிட்டிசன் சயின்டிஸ்ட் முகிலன் ஆகியோர் கலந்து கொண்டு 17 முதல் 22 வயதுள்ள இளைஞர்கள் வானவியல் மாநாட்டில் சமர்பிக்க வேண்டிய ஆய்வு கட்டுரைகள், போஸ்டர்கள் மற்றும் வானவியல் குறித்த நிகழ்வுகளில் பங்கேற்பது குறித்து செயல்விளக்கத்துடன் பேசினர்.

மூத்த வழக்கறிஞர் மார்டின் கலந்து கொண்டு  வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் குறித்த விழிப்புணர்வு அட்டைகள், செய்முறை அறிவியல் கருவிகள் வழங்கி பேசினார்.

`டாஸ்’ நிர்வாகிகள் சாந்தி, ஜெகதீஸ்வரன், ரமேஷ், சக்திவேல், சொக்கநாதன் உள்பட பேராசிரியர்கள், டாஸ் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் திருநெல்வேலி  டாஸ் செயற்குழு உறுப்பினர் முத்துசாமி நன்றி கூறினார்.

இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் இளைஞர்கள் நிகழ்வுகள் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமாரை 9840607391 எண்ணில் தொடர்பு கொண்டு அல்லது  https://forms.gle/QuwZdNMLKaH49oD8 இணைய வழியில் பதிவு செய்து பங்கேற்கலாம்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *