• April 3, 2025

ஆபாச வீடியோ விவகாரம் – நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம்

 ஆபாச வீடியோ விவகாரம் – நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம்

பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும்  ‘சிறகடிக்க ஆசை’ என்ற தொடரில் நடித்து வருபவர் ஸ்ருதி நாராயணன். இந்த தொடரில், வில்லி கதாபாத்திரத்திற்கு தோழியாக இவர் நடித்து வருகிறார்.

சமீபத்தில், இவரின் ஆபாச வீடியோ என்று ஒன்று சோசியல் மீடியாவில் பரவி வந்த நிலையில், இது உண்மை கிடையாது ஏ.ஐ வீடியோ என ஸ்ருதி விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அவர், ‘வீடியோவுக்கு பின்னால் பெண்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டு இருக்கும் ஆண் குறித்து யாருமே கேள்வி கேட்கவில்லை. வீடியோவை பகிர்ந்தவர்கள், அதனால் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிப்பை  சந்திக்கும் என 2 நொடிகள் கூட நினைக்கவில்லை. ஒரு பெண்ணை உடல், மனம், உணர்வு ரீதியாக பெரும் பாதிப்பை உண்டாக்கியிருக்கும் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்” என்று கூறி இருக்கிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *