கோவில்பட்டியில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்
கோவில்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்தவர் ஜான் (57). இவரது சொந்த ஊர் மதுரை. கோவில்பட்டி சண்முகா நகரில் தங்கி இருந்து மோட்டார் வாகன உரிமம் பெறுவது, புதுப்பித்தல், டிரைவிங் லைசென்ஸ் பெறுவது தொடர்பான ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் முன்னாள் மத்திய மந்திரியும், கருனாநிதியின் மூத்த மகனுமான மு. க. அழகிரியை திமுகவில் சேர்க்க வலியுறுத்தி கோவில்பட்டி தாமஸ் நகரில் உள்ள 100 அடி உயரமுள்ள தனியார் செல் போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்,.
இந்த காட்சியை பார்த்த அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர், கீழே இரங்கி வருமாறு கூச்சலிட்டனர், ஆனால் அந்த நபர் ஒரு பையில் வைத்திருந்த கேனில் இருக்கும் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க போவதாக மிரட்டினார்,
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது, இது பற்றி தகவல் அறிந்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் சம்பவ இடம் விரைந்தனர், தீயணைப்பு படை வீரர்களும் அங்கு வந்தனர் .அவர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறி உச்சியில் அமர்ந்து இருந்தவரிடம் நைசாக பேசி பெட்ரோல் கேனை கீழே போட வைத்தனர்,

தொடர்ந்து அந்த நபரை கீழே இறங்க வைக்க போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி நீண்ட போராட்டத்துக்கு பிறகு கீழே இறங்க வைத்தனர், வெயில் அதிகம் கொளுத்தியதால் அவரால் இறங்க முடியவில்லை. தீயணைப்பு படையினர் உதவியுடன் மீட்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.







