• May 9, 2024

எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி நடைபயணம்

 எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி நடைபயணம்

கோவில்பட்டியில் நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் எழுச்சி நாளை முன்னிட்டு கூட்டமைப்பு சார்பாக எரிபொருள் உபயோகச் சிக்கனத்தை வலியுறுத்தி நடை பயணம் நடத்தப்பட்டது.
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் எதிரில் இருந்து ரெயில் நிலையம் வரை பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு மாநில தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கோவில்பட்டி சங்க தலைவர் விஜி என்ற ராஜா முன்னிலை வைத்தார்.


கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் நடை பயணத்தை தொடக்கி வைத்தார், பேரணியில் விநியோகஸ்தர்கள்-வணிகர்கள் ஒற்றுமை மேம்படுத்துதல், பாரம்பரிய வணிகத்தை காத்தல்,ஆன்லைன் வர்த்தகத்தை தவிர்த்தல், சமூக அக்கறையுடன் செயல்படுதல், நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்றனர்.
இந்த நடை பயணத்தில் துணைத்தலைவர் அசோக் குமார்,நிர்வாக குழு உறுப்பினர் தினகர், ராஜகுரு பரமேஸ்வரன், இணை செயலாளர்,சந்திர கண்ணன் ஆலோசகர்,அழகு லட்சுமணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கவுரவ ஆலோசகர் சீனிவாசன் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *