100 மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், பேனா; கடம்பூர் ராஜூ வழங்கினார்

கோவில்பட்டி காந்தி நகரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஶ்ரீ அனுக்கை விநாயகர் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ கருப்பசாமி கோவில் வைகாசி கொடை விழா நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ சுவாமி தரிசனம் செய்தார். அப்பகுதியில் உள்ள 100 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் பேனா உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார்.
மேலும் 10ம் வகுப்பு தேர்வில் 454 மார்க் எடுத்த ஏழை மாணவனுக்கு படிப்பு செலவுக்கு ரூ 5700 கல்வி உதவித்தொகையாக வழங்கினார்.

இவ்விழாவில் அதிமுக பெருநகர செயலாளர் விஜயபாண்டியன், வார்டு செயலாளர்கள் சிங்கராஜ், ஆவின் தலைவர் தாமோதரன், கிருஷ்ணமூர்த்தி, மாரியப்பன், ஆபிரகாம் அய்யாதுரை மற்றும் நிர்வாகிகள் அப்பாசாமி, ஆரோக்கியராஜ், போடு சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை 16 வது வார்டு கழக செயலாளர் ரமேஷ் செய்திருந்தார்.
