கோவில்பட்டி லக்குமி ஆலை பள்ளி முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுக்கு பிறகு சந்திப்பு
கோவில்பட்டி லக்குமி ஆலை மேல்நிலைபள்ளியில் கடந்த 1972 -73ம் ஆண்டு 10 -ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் 50 ஆண்டுக்கு பின்னர் மறு கூடுதல் விழா என்ற பெயரில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அப்பள்ளி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1972 -73ம் ஆண்டு 10-ம் வகுப்பு பயின்ற 32 மாணவர்கள் 50 ஆண்டுக்கு பின்னர் தங்களது நண்பர்களை சந்தித்து தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களையும் வரழைத்து மரியாதை செலுத்தி நினைவு பரிசு வழங்கினர். பள்ளியின் செயலாளர் கோவிந்தராஜலு முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பள்ளி சார்பில் நினைவு பரிசுகளை வழங்கினர். 50 ஆண்டுகளுக்கு பின்னர் தங்களது பள்ளி நண்பர்களை சந்தித்து மகிழ்ந்து கொண்டது மட்டுமின்றி, தங்களது குடும்பத்தினருக்கும் அறிமுகப்படுத்தி வைத்து மகிழ்ச்சி அடைந்தனர்.