• May 9, 2024

கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற நிறுவனர் சங்கரவள்ளி நாயகம் 15வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

 கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற நிறுவனர் சங்கரவள்ளி நாயகம் 15வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

வ.உ.சியின் வாழ்க்கை வரலாறும், இலக்கியப் பணிகளும் என்ற தலைப்பில் ஆய்வு செய்தவர் சங்கரவள்ளி நாயகம். அவர் எழுதிய ஆறு நூல்கள் நாட்டுடமையாக்கப் பட்டுள்ளன.

நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு திருவள்ளுவர் மன்ற நெறிப்படுத்துனர் தொழிலதிபர் விநாயகா ரமேஷ் தலைமை வகித்தார். புனித ஓம் கல்வி நிறுவனத்தின் தலைவர் லெட்சுமணப்பெருமாள் மற்றும் தொழிலதிபர் பசும்பொன் அறக்கட்டளை நிறுவனர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
மன்றச்செயலாளர் நம்.சீனிவாசன் வரவேற்புரையாற்றினார்,
திருவள்ளுவர் மன்றத்தின் தலைவர் பேராசிரியர் கருத்தப்பாண்டி அமரர். சங்கரவள்ளி நாயகத்தின் தமிழ்த்தொண்டினையும், மாணவர்கள் மேம்பாட்டிற்காக ஆற்றிய கல்விப்பணியையும், விவரித்துப் பேசினார். மன்றத்தின் துணைத்தலைவர் திருமலை முத்துச்சாமி நன்றியுரையாற்றினார்

, ,

மேலும் நிகழ்ச்சியில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் தலைவர் க.தமிழரசன், உரத்தசிந்தனை அமைப்பின் தலைவர் சிவானந்தம், எழுத்தாளர் பொன்ராஜ், இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாவட்டத் துணைத்தலைவர் முனைவர். ஆ.சம்பத்குமார், கலை இலக்கியப் பெருமன்றத்தின் சாத்தூர் நகரச்செயலாளர் ஜெயா ஜனார்த்தனன்,
எழுத்தாளர் முனைவர். முருக சரஸ்வதி, உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் மாவட்டத் துணைத்தலைவர் வழக்கறிஞர் ஜெயஶ்ரீ, பேராசிரியர் ரா.சேதுராமன், உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் மக்கள் தொடர்பு அலுவலர் ப.முத்துச்செல்வம், நாம் தமிழர் தொகுதிச்செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார், பறையர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தாவீது ராஜா, கம்பன் கழகத்தின் நிர்வாகி சரவணச்செல்வன், தமிழ்நாடு காமராஜர் பேரவையின் தலைவர், நாஞ்சில் குமார், உள்ளிட்ட பலர் பேராசிரியர் முனைவர். அ.சங்கரவள்ளி நாயகத்திற்கு புகழஞ்சலி செலுத்தினர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *