காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், மருத்துவமனையிலும் உண்ணாவிரதம்
மத்திய அரசு கல்வித்தொகையை வழங்காததை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சசிகாந்த் செந்தில் எம்.பி. எம்.பி. உண்ணாவிரத போராட்டத்திலும் கணினி மூலம் அலுவல்களை கவனித்தார்.
அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில செய்தி தொடர்பு துறை தலைவர் கோபண்ணா, பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் மற்றும் திரளான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இதனையடுத்து போராட்டத்தின்போது திடீரென சசிகாந்த் செந்திலுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில்,சிகிச்சைக்கு பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தாலும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால் சசிகாந்த் செந்தில் அதற்கு மறுப்பு தெரிவித்து, மருத்துவமனையில் இருந்தபடியே உண்ணாவிரதம் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

இதுகுறித்து எம்.பி. சசிகாந்த் செந்தில் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, “திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்ததால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறேன். உண்ணாவிரதம் நேற்று இரவு முதல் தொடந்து நடைபெறுகிறது. மருத்துவர்கள் உடல் நலன் கருதி உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்தினர்.
ஆனால், தொடர்ந்து உண்ணாவிரதம் நடைபெறும். இந்த போராட்டத்தை தமிழ்நாடு அரசு, பிரதமர் மோடிக்கும், மத்திய கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது எனது கோரிக்கை. எனது கோரிக்கை நிறைவேறும் வரை இந்த உண்ணாவிரதம் தொடரும்” என தெரிவித்துள்ளார்.







