கோவில்பட்டி பள்ளியில் நிழல் இல்லா நேரத்தை கண்டறிவது பற்றிய செயல் விளக்கம்
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் மாவட்டம் முழுவதும் அஸ்ட்ரோ கிளப்புகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் பள்ளி கல்லூரி மாணவர்கள் பொது மக்களிடம் வானவியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை பரப்புரை செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நிழல் இல்லா நாள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.நிழல் இல்லா நாள் என்பது அரிய வான் நிகழ்வாகும்.நண்பகலில் சூரியன் நேரடியாக தலைக்கு மேல் இருக்கும் போது வருடத்திற்கு இரண்டு முறை நிகழும் நிகழ்வாகும். 23.5டிகிரி வடக்கு அட்சரேகைக்கும் 23.5டிகிரி தெற்கு அட்சரேகைக்கும் இடைப்பட்ட கடகரேகைக்கும் மகரரேகைக்கும் இடைப்பட்ட இடங்களில் நிகழ்கிறது.

தமிழகத்தில் சென்னையில் ஆகஸ்ட் மாதம் 18ம்தேதி தொடங்கி கன்னியாகுமரியில் செப்டம்பர் 2ம் தேதி வரை நிழல் இல்லா நாளாகும்.
ஆகஸ்ட் 30ம்தேதி கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி ஆகஸ்ட் 31ம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய ஊர்களில் நிழல் இல்லா நாளாகும்.
இதனை முன்னிட்டு கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் வட்டமாக நின்றும், தரையில் ஒரு குச்சியை ஊன்றி நிழலை அளவு செய்தனர்.,சரியாக 12:20மணிக்கு நிழல் இல்லா நேரத்தை கண்டறிந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் ரத்தின ராஜா தலைமை தாங்கினார், நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருணாசலம் முன்னிலை வகித்தார்
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ் கலந்து கொண்டு நிழல் இல்லா நாளில் நிழல் இல்லா நேரத்தை கண்டறிவது குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தார்.
தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோகிளப் செயலாளர் முத்துமுருகன்,தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி,ஆசிரியர்கள் அய்யமூர்த்தி, துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்







