வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை
மதுரை செல்லூரில் வசித்து வந்த ரூபன்ராஜ் – பிரியதர்ஷினி தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது மணமகன் வீட்டார் வரதட்சணையாக 300 பவுன் நகை கேட்ட நிலையில், பெண் வீட்டார் 150 பவுன் கொடுத்தனர்.
இந்த நிலையில் மேலும் 150 பவுன் நகை தர வேண்டும் என்று கேட்டு மணமகன் வீட்டார் பிரியதர்ஷினியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் ரூபன்ராஜ் – பிரியதர்ஷினி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று பிரியதர்ஷினி தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியதர்ஷினி உயிரிழந்தார்.

வரதட்சணை கொடுமையால் பிரியதர்ஷினி தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷினி கணவர் ரூபன் ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன் மற்றும் மாமியார் தனபாக்கியம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







