மந்தித்தோப்பு துளசிங்க நகர் குரு சித்தர் பீடத்தில் அன்னதானம் கூடம் திறப்பு
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள அம்மா பூமாதேவி ஆலயம் குரு சித்தர் பீடத்தில் மீனாட்சி அம்மாள் அன்னதானம் கூடம் திறப்பு விழா நடைபெற்றது.
இதனையொட்டி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜையும் நித்திய பூஜையும் நடைபெற்றது.

காலை 7.40மணிக்கு கணபதி பூஜை சங்கல்பம் புன்னியாக வாசனம் கும்ப பூஜை 108 சங்கு பூஜை கணபதி ஹோமம் அம்பாள் முலமந்திர ஹோமம் புர்ணாஷுதி தீபாராதனை நடைபெற்றது.
9.25 மணிக்கு அம்மா பூமாதேவி உற்சவர் அம்பாள் குரு நாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஞ்சள் பொடி மாபொடி திரவியம் பால் தயிர் இளநீர் தேன் சந்தனம் வாசனை திரவியங்கள் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, அன்னதான கூடத்தை திறந்து வைத்தார்.
விழாவில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, போடுசாமி, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமர், தொழிலதிபர்
சுப்பாராஜ் சங்கரேஸ்வரி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
பூஜைகளை லட்சுமணன்சுவாமி, செல்வசுப்பிரமணியன், ஆறுமுகம் செய்தார்கள். விழா எற்பாடுகளை அம்மா பூமாதேவி ஆலயம் மற்றும் குருபாத தரிசன பரிபாலன் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.







