கோவில்பட்டியில் மண்டல பள்ளி ஆக்கி: திருநெல்வேலி அணி `சாம்பியன்’ பட்டம் வென்றது

தூத்துக்குடி மண்டல அளவிலான பள்ளிக்கூடங்களுக்கு இடையேயான ஆக்கி போட்டி கடந்த 3 நாட்களாக கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மற்றும் வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானங்களில் நடைபெற்றது.
இப் போட்டியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்ட அணிகள் மற்றும் திருநெல்வேலி விளையாட்டு விடுதி ஆகிய 7 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
லீக் போட்டியில் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி திருநெல்வேலி விளையாட்டு விடுதி, சிவகங்கை புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை எஸ் பி கே மேல்நிலைப்பள்ளி அணிகள் தகுதி பெற்றன.

நேற்று காலை நடைபெற்ற அரையிறுதி போட்டியில் திருநெல்வேலி விளையாட்டு விடுதி 3-1 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி அணியை வீழ்த்தியது.
இரண்டாவது நடைபெற்ற அரை இறுதி போட்டியில் அருப்புக்கோட்டை எஸ் பி கே மேல்நிலைப் பள்ளி அணி 2-0 என்ற கோல்கணக்கில் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி அணியை வீழ்த்தியது
மாலையில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் சிவகங்கை புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி அணி 4-0 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி அணியை வீழ்த்தியது.
தொடர்ந்து நடைபெற்ற இறுதி போட்டியை கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி மாவட்ட கவுன்சிலர் ஜி. பிரியா, டாக்டர் எஸ் குருராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இறுதிப் போட்டியில் திருநெல்வேலி விளையாட்டு விடுதி அணி 5-0 என்ற கோல் கணக்கில் அருப்புக்கோட்டை எஸ் பி கே மேல்நிலைப்பள்ளி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிசென்றது.

இதன் மூலம் இந்த அணி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான தமிழ்நாடு ஸ்கூல் ஆக்கி லீக் போட்டிக்கு தகுதி பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி தலைமை தாங்கினார். நாடார் மேல்நிலைப்பள்ளி செயலாளர் வழக்கறிஞர் ரத்தினராஜா, ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு செயற்குழு உறுப்பினர் தியாகபூமி, நாடார் மேல்நிலைப்பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் சாமி ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கவுன்சிலர் பிரியா, டாக்டர் எஸ் குருராஜ் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், பதக்கம் மற்றும் சிறப்பு பரிசுகளை வழங்கினார்கள்.
சிறந்த வீரருக்கான விருது கோல் கீப்பர் ஈஸ்வர் (கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி) தடுப்பு ஆட்டக்காரர் முகேஷ், (எஸ் பி கே மேல்நிலைப்பள்ளி அருப்புக்கோட்டை) நடுக்கள ஆட்டக்காரர் கமலேஷ் (விளையாட்டு விடுதி திருநெல்வேலி) அதிக கோல் அடித்த வீரராக மனோஜ் (புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி சிவகங்கை) ஆகியோர் பெற்றனர்,.
நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ஆல்வின் அதிசயராஜ் அனைவரையும் வரவேற்றார் போட்டியின் இயக்குனராக திருச்செல்வம் நடுவர் மேலாளராக காளிதாஸ் மற்றும் நடுவர்களாக கார்த்திக் ராஜா, மதன்குமார் சதீஷ் சிவானந்தம் ராம் சேவியர் சண்முகப்பிரியா ஜெய் கணேஷ் மதனா ஆகியோர் செயல்பட்டனர் போட்டிக்கான ஏற்பாடுகளை ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா, சுரேந்திரன், முருகன், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ்குமார், மனோஜ் குமார், மாயாண்டி, தனசேகரன், புகழேந்தி, ரகு ஆகியோர் செய்திருந்தனர் இறுதியில் திருச்செல்வம் நன்றி கூறினார்,
முன்னதாக 3 நாள் நடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களை தூத்துக்குடி மண்டல ஆக்கி அணிக்கான தேர்வு நடைபெற்றது. தேர்வு குழு உறுப்பினர்களாக முன்னாள் இந்திய ஆக்கி வீரர் அஸ்வின் ,முன்னாள் தேசிய வீரர் காளிமுத்து பாண்டிராஜா ஆகியோர் தேர்வு செய்தனர்







