கோவில்பட்டி கல்லூரியில் உலக சகோதரத்துவ தின விழா
கோவில்பட்டி , கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி தமிழ்த்துறை, இளைஞர் நலச்சங்கம் மற்றும் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கோவில்பட்டி கிளை கிராம முன்னேற்றத் திட்டம் இணைந்து உலக சகோதரத்துவ தினம் கொண்டாடப்பட்டது.
தொடக்கத்தில் இளைஞர் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ச.ஜெயகுரும்பன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் மூ.சுப்புலெட்சுமி தலைமை தாங்கி பேசினார்.

.அதனைத் தாெடர்ந்து கோவில்பட்டி விவேகானந்த கேந்திர பொறுப்பாளர் பரமகுரு, உலக சகோதரத்துவ தினம் பற்றியும் விவேகானந்தரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைப் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். பின் மாணவர்களிடம் கேள்வி பதில்கள் மூலமாக பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் 180 மாணவ, மாணவியர்களும் 7 பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் அசோக்குமார் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் மா.சங்கரேஸ்வரி, ச.ஜெயகுரும்பன், ந.அசோக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.







