கோவில்பட்டியில் இலவச மருத்துவ முகாம்
பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி திட்டங்குளத்தில் இலவச பொது மருத்துவம், கண், சிறுநீரக மருத்துவ முகாம் நடந்தது.
முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு நாடார் பொதுநல மருத்துவமனை தலைவர் டி.கே.டி.திலகரத்தினம் தலைமை தாங்கினார், வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சரவணகிருஷ்ணன் முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜா, கிழக்கு ஒன்றிய தலைவர் மகாலட்சுமி வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

டாக்டர்கள் பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், ஜெயா செல்வராணி, அகஸ்டின் ஜெபகுமார், ஸ்ரீபாலாஜி,முத்து சஹானா, பிரவீன்குமார், ஆர்.கே.ராஸ்மி பிரவீன், பாலசங்கர்,ராஜ்குமார், கார்த்திக் மற்றும் குழுவினர் பொதுமக்களை பரிசோதனை செய்து, ஆலோசனைகளை வழங்கினர். மேலும், மருத்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

முகாமில், பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன், வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பொன்ராஜ், கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து, அயலகத் தமிழ் பிரிவு மாநிலச் செயலாளர் மாரியப்பன், முன்னாள் மாவட்ட தலைவர் பாலு, கிழக்கு ஒன்றிய பொதுச்செயலாளர்கள் வேல்முருகன், லட்சுமி, பொதுநல மருத்துவமனை மருத்துவ முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் நந்தகுமார், சுரேஷ், பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.







