கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் வளாகத்தில் துப்புரவு பணி
கோவில்பட்டி ரோட்டரி கிளப் மற்றும் எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி மாணவர்கள் இணைந்து தூய்மை பணி திட்டத்தின் முதற்கட்டமாக கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் துப்புரவு பணி நடைபெற்றது.

தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் பழனிக்குமார் அனைவரையும் வரவேற்றார்,முன்னாள் மாவட்ட உதவி ஆளுநர் முத்துசெல்வம் முன்னிலை வைத்தார். ரோட்டரி, இணைச் செயலாளர் ரத்தினகுமார், அருண், உறுப்பினர்கள் கண்ணன், இளங்கோ, பூல்பாண்டி, நடராஜன், ராஜமாணிக்கம், 50 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், நகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள்கலந்து கொண்டனர். பொருளாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.







