தூத்துக்குடி நிகழ்ச்சியில் டி.ராஜேந்தருக்கு திடீர் மயக்கம்
தூத்துக்குடியில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அகில இந்திய சிம்பு தலைமை ரசிகர் நற்பணி மன்றம் மற்றும் டி.ராஜேந்தர் நற்பணி மன்றம் சார்பில் வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி சிவந்தாகுளம் பகுதியில் இன்று நடைபெற்றது.
நடிகர் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு, வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்த மன்ற நிர்வாகிகள் அவரை ஆசுவாசப்படுத்தினர். சிறிது நேரத்தில் சகஜ நிலைக்கு திரும்பினார். இதனால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
நிகழ்ச்சியில், ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிம்பு கண்ணன், மணிகண்டன், கலப்பை இயக்கம் செல்வகுமார், வழக்கறிஞர் அழகுவேல் உட்பட டி.ராஜேந்தர், சிம்பு ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.