எட்டயபுரம் பகுதியில் மழையால் 108 வீடுகள் பாதிப்பு: அரசின் நிவாரண உதவியை மார்கண்டேயன் வழங்கினார்
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி, எட்டயபுரம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழையால் சேதம் அடைந்துள்ள வீட்டின் உரிமையாளர்கள் 108- நபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள தலா 10,000- ரூபாயை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் இன்று வழங்கினார்.
எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது இந்த தொகை வழங்கப்பட்டது. மேலும் மழையால் சேதம் அடைந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு நிவாரண பொருட்களையும் ஜி.வி.மார்கண்டேயன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் எட்டயபுரம் வட்டாட்சியர் மல்லிகா, பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவநீத கண்ணன், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், எட்டையபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,