மண்டல கால்பந்து போட்டி: காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி பள்ளி அணி வெற்றி
![மண்டல கால்பந்து போட்டி: காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி பள்ளி அணி வெற்றி](https://tn96news.com/wp-content/uploads/2023/08/667b5c36-194a-4bff-a50a-ec2f989c74a6-850x560.jpeg)
கோவில்பட்டி காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் மண்டல அளவிலான கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கு பெற்றன. இறுதிப் போட்டியில் காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி மற்றும் இசக்கி வித்யாஷ்ரம் தென்காசி அணிகள் மோதின.
இரு அணிகள் இடையேயான ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. போட்டி நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் ஏதும் போடவில்லை. அந்த அளவுக்கு போட்டி மிகவும் கடுமையாக இருந்தது. இறுதியில் பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி மேல்நிலைப்பள்ளி அணி 3-2 என்ற கோல் கணக்கில் மாணவர்கள் அணி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற அணியில் இடம் பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம், துணை தலைவர் எம்..செல்வராஜ், செயலாளர் எஸ்.ஆர்..ஜெயபாலன், பொருளாளர் டி..ஆர்.சுரேஷ் குமார், பள்ளியின் செயலாளர் ஏ..கண்ணப்பன், பொருளாளர் வி. கண்ணன், உறுப்பினர்கள் கே.பாஸ்கர், ஆர் கண்ணன், ஜெ. சண்முகசுந்தரம் மற்றும் பள்ளி முதல்வர் சி.. ஜெயகுமார் ஆகியோர் பாராட்டினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)
1 Comment
Good 😊👍👍👍👍 keep it up and also September match we should win Thank you 😁😁😁😁😁😁