ஐ.சி.எம். நடுநிலைப்பள்ளியில் `நிழல் இல்லா அதிசய நாள்’ செயல் விளக்கம்
![ஐ.சி.எம். நடுநிலைப்பள்ளியில் `நிழல் இல்லா அதிசய நாள்’ செயல் விளக்கம்](https://tn96news.com/wp-content/uploads/2023/08/download-2.jpeg)
நிழல் இல்லா நாள் என்பது ஒரு அரிய வான்நிகழ்வு, நண்பகலில் சூரியன் நேரடியாக தலைக்கு மேல் இருக்கும் போது வருடத்திற்கு இரண்டு முறை நிகழும் நிகழ்வாகும். 23.5 டிகிரி வடக்கு அட்சரேகைக்கும் 23.5 டிகிரி தெற்கு அட்சரேகைக்கும் இடைப்பட்ட கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட இடங்களில் நிகழ்கிறது.
கோவில்பட்டியில் ஆகஸ்ட் 29 (இன்று) நிழல் இல்லா நாளாகும். இதையொட்டி கோவில்பட்டி ஐ.சி.எம். நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், மாணவ மாணவிகள் வட்டமாக நின்றும், தரையில் குச்சியை ஊன்றியும் நிழல் இல்லாததை சரியாக 12.18 மணிக்கு கண்டறிந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ராதா தலைமை தாங்கினார். அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ்குமார், முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி கலந்துகொண்டு நிழலில்லா நாள் குறித்து விளக்கி பேசினார். பள்ளி மாணவ மாணவிகள் அனைவருக்கும் தொலைநோக்கி மூலம் வானில் நடக்கும் நிகழ்வுகளை பார்வையிட பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி ஆசிரியை அபிலாதிரேஸ் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)