தூத்துக்குடி, தென்காசி மாவட்ட நிர்வாகங்களை கண்டித்து கோவில்பட்டியில் 5வது தூண் அமைப்பு சார்பில் போராட்டம்
![தூத்துக்குடி, தென்காசி மாவட்ட நிர்வாகங்களை கண்டித்து கோவில்பட்டியில் 5வது தூண் அமைப்பு சார்பில் போராட்டம்](https://tn96news.com/wp-content/uploads/2023/08/FB_IMG_1693293129250-850x560.jpg)
கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள அப்பனேரி உள்பட 12 ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டத்தில் இணைக்க வலியுறுத்தியும், 12 ஊராட்சிகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் தூத்துக்குடி, தென்காசி மாவட்ட நிர்வாகங்களை கண்டித்தும் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் 5வது தூண் அமைப்பு சார்பில் படையல் போட்டு போராட்டம் நடைபெற்றது.
இரண்டு மாவட்ட நிர்வாகங்களை கண்டித்து மாரடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 5வது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள் மாரிமுத்து, ராஜேஷ் கண்ணா , 5வது தூண் அமைப்பின் ஜெயபிரகாஷ், சேது ராமசாமி, மாரிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)