• November 15, 2026

கோவில்பட்டியில் உரக்கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.30 லட்சம் கொள்ளை; 2 பேர் அதிரடி கைது 

 கோவில்பட்டியில் உரக்கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.30 லட்சம் கொள்ளை; 2 பேர் அதிரடி கைது 

Oplus_16908288

கோவில்பட்டி  திட்டங்குளம் பகுதியில், தீத்தம்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் (வயது 34) என்பவர் ‘அக்ரி 100’ என்ற பெயரில் உரக்கடை நடத்தி வருகிறார்.  

தற்போது அப்பகுதியில் மானாவாரி விவசாயப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், கடந்த சில நாட்களாக உரம் மற்றும் விதைகள் விற்பனை அதிகரித்திருந்தது. இதன் மூலம் கிடைத்த சுமார் ரூ.30 லட்சம் பணத்தை ரவிக்குமார் கடையின் பணப்பெட்டியில் வைத்திருந்தார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் கடையின் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கி, பணப்பெட்டியை உடைத்து அதிலிருந்த ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.  

இன்று காலை கடையை திறக்க வந்தபோது கொள்ளை சம்பவம் நடந்தது தெரிந்து கடை உரிமையாளர் ரவிக்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

 இது பற்றிய புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதன் மூலம் கிடைத்த தகவல்களை கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடித்தனர்.

 விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் பகுதியை சேர்ந்த  ராஜேந்திரன் (66) சாத்தூர் பகுதியைச் சேர்ந்த சோனைமுத்து மகன் பாலு (எ) பாலசுப்பிரமணியன் (49) ஆகிய இருவரையும் தோட்டிலோவன்பட்டி சோதனைச் சாவடி பகுதியில்  கைது செய்து, அவர்களிடம் இருந்து  ரூ.30 லட்சம் மீட்கப்பட்டது 

கைது செய்யப்பட்ட ராஜேந்திரன் மீது ஏற்கனவே விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 32 திருட்டு வழக்குகள், பாலு (எ) பாலசுப்பிரமணியன் மீது விருதுநகர் மாவட்டத்தில் 7 திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *