• November 15, 2026

மதுரை நகைக்கடையில் கொள்ளை:  இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி உள்பட 2 பேர் கைது 

 மதுரை நகைக்கடையில் கொள்ளை:  இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி உள்பட 2 பேர் கைது 

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் மீனாட்சி மற்றும் யூடியூபர் நிஷாந்த் தந்தை சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 முதலில் காளவாசல் பைபாஸ் சாலையில் புதிதாக தொடங்கப்பட்ட இந்த நகைக்கடையின் தரைத்தளத்தில் விற்பனை நடைபெற்றுவந்த நிலையில், இரண்டாம் தளம் காலியாகவும், மூன்றாம் தளத்தில் லாக்கர்களைப் பொருத்தும் பணிகளும் நடைபெற்று வந்தன. அப்போது கட்டிடத்தில் மின்தூக்கி பொருத்துதல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால், கட்டிடத்தின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த சாரத்தின் வழியாக மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் முகமூடி அணிந்து நுழைந்த கும்பல், லாக்கர்களை உடைத்துச் சுமார் 15 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. இச்சம்பவம் குறித்துத் துப்பு துலக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கில் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பிரமுகரான மீனாட்சி உள்ளிட்ட 2பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், யூடியூபர் நிஷாந்த் என்பவரின் தந்தை சுரேஷ் என்பவரையும் கைது செய்துள்ள போலீசார்,  கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 5 கிலோ தங்க நகைகளை மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *