• November 15, 2026

பள்ளிக்கூட ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

 பள்ளிக்கூட ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அருள் பாக்கியம் (வயது 48), திருநெல்வேலிபாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியில் வசித்து வந்தார். பாளையங்கோட்டையில்  தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், ஆசிரியர் அருள் பாக்கியம் அப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவர், வீட்டிற்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பெற்றோரின் புகாரின் பேரில், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நாககுமாரி மற்றும் போலீசார் ஆசிரியர் அருள் பாக்கியம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன் உத்தரவின் பேரில், போலீசார் நேற்று (நவ. 13) சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்குச் சென்று அங்கு பணியிலிருந்த ஆசிரியர் அருள் பாக்கியத்தைக் கைது செய்தனர். 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *