• October 31, 2026

தூத்துக்குடி உப்பள தொழிலாளர்களுக்கு ரூ.11 ஆயிரம்  தீபாவளி போனஸ்

 தூத்துக்குடி உப்பள தொழிலாளர்களுக்கு ரூ.11 ஆயிரம்  தீபாவளி போனஸ்

தூத்துக்குடி மாவட்ட உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உப்பள தொழிலாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுக்கு இடையே 2026-ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.

தூத்துக்குடி வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உப்பள தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

:உப்பளங்களில் உப்பு வாரும் தொழிலாளர்களுக்கு – ரூ.11 ஆயிரம் இதர பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு – ரூ.10,675 போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டது,.

இந்த போனஸ் தொகையை நவம்பர் 5-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வழக்கமாக வழங்கப்படும் 9 நாட்கள் விடுமுறைச் சம்பளத்துடன், சட்டப்பேரவைத் தேர்தல் விடுமுறை நாளுக்கான சம்பளத்தையும் சேர்த்து மொத்தம் 10 நாட்களுக்கான விடுமுறைச் சம்பளம் வழங்கப்படும்.

– மிகைப்படி மற்றும் கண்ணாடி வாங்குவதற்காக ரூ.400 வழங்கப்படும்.

பேச்சுவார்த்தையின் முடிவில் இரு தரப்பினரும் ஒருமனதாக போனஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களுக்கு இந்தத் தீபாவளி போனஸ் அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *