• October 31, 2026

தீபாவளி பண்டிகை; பெங்களூரு-தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்

 தீபாவளி பண்டிகை; பெங்களூரு-தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் வசதிக்காக பெங்களூரு கன்டோன் மென்ட்-தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. பெங்க ளூரு கன்டோன்மென்ட்-தூத்துக்குடி சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06533) வருகிற 6-ந்தேதி இரவு 9.45 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.

மறுமார்க்கமாக தூத்துக்குடி-பெங்களூரு கன்டோன்மென்ட் சிறப்பு ரெயில் (06534) வருகிற 7-ந்தேதி மதியம் 3.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு பெங்களூருவை வந்தடையும். இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும், ஓசூர், தர்ம புரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *