• October 30, 2026

கல்லூரி ஆசிரியர்கள் நுண்ணறிவு  திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் 

 கல்லூரி ஆசிரியர்கள் நுண்ணறிவு  திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் 

Oplus_16908288

கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில், உள்தர மதிப்பீட்டுக் கழகம் (IQAC) மற்றும் நிறுவன புத்தாக்கக் குழு(IIC) இணைந்து ‘செயற்கை நுண்ணறிவுக்குத் தயாரான கல்வியாளர்: தேசியக் கல்விக் கொள்கையுடன்` ஒருங்கிணைந்த கற்பித்தல், ஆராய்ச்சி  மற்றும் தர உறுதிப்பாடு ‘ என்ற தலைப்பில்  இரண்டு நாட்கள் கல்லூரிச் செயலர் பா.மகேந்திரன் அறிவுறுத்தலின்படி ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

இயற்பியல் துறைத்தலைவரும் உள்தர மதிப்பீட்டுக்கழக ஒருங்கிணைப்பாளருமான பெ.சித்ரலேகா வரவேற்று பேசினார். முதல்வர்  அ.பாண்டியராணி  தலைமை தாங்கினார்.  

 தாவரவியல் சுயநிதிப்பாடப்பரிவுகளின் இயக்குநருமான(பொ)  பா.மகேஸ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேராசிரியர்களுக்கு கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் கல்வித்தர மேம்பாட்டில் உருவாக்க செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் குறித்து விளக்கினார். மேலும், தேசியக் கல்விக் கொள்கை இலக்குகளுக்கு ஏற்ப தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தரமான கல்வியை வழங்குவதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

 முடிவில்  இயற்பியல் துறை பேராசிரியர் ரா.கவிதாமஞ்சு  நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *