• October 28, 2026

நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு

 நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு


கோவில்பட்டி நகராட்சி 32வது வார்டு பாரதிநகர் கருமாரியம்மன் கோவில் தெருவில் கடந்த 2024ம் ஆண்டு நகராட்சி நிதியிலிருந்து பேவர் பிளாக் சாலை பணிகள் தொடங்கப்பட்டது/ ஆனால் இந்த சாலை  முழுமை பெறாமல் பாதியில் நிற்கிறது.

சாலை பணிகள் ஆண்டு கணக்கில் கிடப்பில் போடப்பட்டதால் அப்பகுதியில் மழைநீரில் கழிவு நீர் கலந்து தேங்கி சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது, இதனால் இப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.

எனவே பேவர் பிளாக் சாலை பணிகளை முழுமைபடுத்தி உடனடியாக செய்து தர வேண்டி கோவில்பட்டி நகராட்சி கவுன்சிலர் .கவியரசன் தலைமையில் அப்பகுதி பொது மக்கள் நகராட்சி அலுவலகத்தை  முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர்,

தொடர்ந்து நகராட்சி ஆணையாளர்  ரவிச்சந்திரனை சந்தித்து கிடப்பில் போடப் பட்டுள்ள அந்த சாலை பணிகளை உடனடியாக செய்து தர வேண்டி கோரிக்கை மனு அளித்தனர் அவரும் உடனடியாக செய்து தருவதாக உறுதி அளித்ததின்பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *