• October 28, 2026

தேனி சிறையில் போலீசாரை தாக்க கைதிகள் பயன்படுத்திய கரண்டி மீட்பு; மேலும் 2 பேர் கைது

 தேனி  சிறையில் போலீசாரை தாக்க கைதிகள் பயன்படுத்திய கரண்டி மீட்பு; மேலும் 2 பேர் கைது

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறை அமைந்துள்ளது. இங்கு விசாரணை கைதிகள் அடைக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் இரவு இந்த சிறையில் கைதிகள் சிலர் குழுவாக சேர்ந்து சிறைக்காவலர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதன்பின்னர் 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடி விட்டனர். இது பற்றிய தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கே.எஸ். பிரவீன் கவுதம் உத்தரவின்பேரில், தேக்கம்பட்டியில் போலீசார் குவிக்கப்பட்டனர். தப்பி ஓடிய கைதிகளை பிடிக்க மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. மாவட்ட சிறை அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. சுற்றளவை சுற்றிவளைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தப்பியோடியவர்களில் பிரவீன் என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வந்தனர். இதில், தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவரை தனிப்படை நேற்று கைது செய்தது.

இதுதவிர ராஜ்குமார், ராஜா சிக்கந்தர் ஆகியோரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதனால், தப்பியோடிய கைதிகளில் 4 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர்., இந்த விவகாரத்தில், சிறை காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை சிறைத்துறைக்கான டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் பிறப்பித்து உள்ளார்.

இந்த நிலையில், தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி சம்பவம் நடந்த சிறைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். நடந்த சம்பவம் பற்றி அதிகாரிகளிடம் விசாரித்து அறிந்து கொண்டார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறும்போது, இரவு 10.20 மணியளவில் எனக்கு தகவல் கிடைத்தது. கைதிகளில் சிலர் வலிப்பு வந்ததுபோல் நடித்துள்ளனர். அவர்களை பார்க்க, சிறைக்காவலர்கள் வந்தபோது, கைதிகள் அவர்களை கடுமையாக தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர் என கூறினார்.

குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் எங்களிடம் உள்ளன. ஆனால் தற்போது அதுபற்றிய விவரங்களை வெளியிடுவது சரியாக இருக்காது இதில், போலீசார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றார். இதேபோன்று, சிறைத்துறைக்கான டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோரும் சிறைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்த சூழலில், போலீசாரை தாக்க கைதிகள் பயன்படுத்திய கரண்டி மீட்கப்பட்டு உள்ளது. தப்பியோடிய கைதிகளில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனால், மொத்த கைது எண்ணிக்கை 15 ஆக உயர்ந்து உள்ளது. தப்பியோடியவர்களில் மீதமுள்ள 2 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், 50-க்கும் மேற்பட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *