அர்னாப் புயல்: காகிநாடாவில் கனமழையினால் மரங்கள் சாய்ந்தன, மின் இணைப்பு துண்டிப்பு
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன் தினம் நிலவிய அர்னாப் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று நேற்று முன் தினம் மாலை 5.30 அளவில் தீவிர புயலாக மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று நேற்று முன் தினம் இரவு 11.30 மணி அளவில் மிக தீவிர புயலாக அதே பகுதிகளில் நிலவியது.
நேற்று காலை 8.30 மணி அளவில் மிக தீவிர புயலாக மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது நேற்று மாலை வரை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்தது. மிகக்கடுமையான சூறாவளி புயல் “அர்னாப்” மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் ஆந்திர கடற்கரையை அடுத்துள்ள பகுதியில் இருந்து கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு சுமார் 22 கி.மீ. வேகத்தில் கிட்டத்தட்ட மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று இரவு 11:30 மணிக்கு அதே பகுதியில் மையம் கொண்டிருந்தது.

அதன் பிறகு, அர்னாப் புயல் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் ஆந்திராவின் காகிநாடா மற்றும் புதுச்சேரியின் ஏனாம் கடற்கரை பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே யானம் பகுதிகளுக்கு அருகில் மிக தீவிர புயலாக கரையை கடக்க தொடங்கியது.
அதன் மையப்பகுதி கரையை முழுவதும் கடக்க ஏறக்குறைய 1 மணிநேரம் எடுக்கும் என தெரிகிறது. இதனால் புதுச்சேரி, ஆந்திரா, மேற்கு வங்காளத்தில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.
சூறாவளியாக மையம் கொண்டு, கரையை கடந்து வரும் அர்னாப், காகிநாடா நகரில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. பல்வேறு பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால், வாகன போக்குவரத்து எதுவுமின்றி சாலைகள் வெறிச்சோடி இருந்தன.
பொதுமக்களும் பாதுகாப்புக்காக வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதேபோன்று, ஒடிசாவின் ராயகடா நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

அர்னாப் சூறாவளியால், மேற்கு வங்காளத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. புர்பா மேதினிப்பூர் பகுதியில் திகா பீச் பகுதியில் அலைகள் பல அடி உயரத்திற்கு எழுந்தன.
எனினும், காலையிலேயே மக்கள் அதனை காண கடற்கரைக்கு வந்தனர். சிலர் மொபைல் போனில் புகைப்படமும் எடுத்தனர். இதனால், அடுத்த 2 மணிநேரத்திற்கு, மணிக்கு 125 கி.மீ. முதல் 135 கி.மீ. வரை பலத்த காற்று வீசும். சில சமயங்களில் மணிக்கு 150 கி.மீ. வரை காற்று வேகமெடுக்கும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.







