• October 28, 2026

விருதுநகரில் பரபரப்பு: கணவரை எரித்து கொலை செய்த இளம்பெண்

 விருதுநகரில் பரபரப்பு: கணவரை எரித்து கொலை செய்த இளம்பெண்

 விருதுநகர் அல்லம்பட்டி வி.வி.ஆர். காலனியை சேர்ந்தவர் சங்கர்குரு (வயது 35). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சங்கரேசுவரி  (வயது 31). இந்த தம்பதிக்கு 12 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். சங்கர்குரு மது குடித்துவிட்டு வீட்டுக்கு… வந்து சங்கரேசுவரியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கணவன்- மனைவி  இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வந்தனர். மகன், மகள் சங்கரேசுவரியின் பராமரிப்பில் இருந்தனர். இதையடுத்து குடும்பத்தினரின் அறிவுறுத்தலின்பேரில் கணவன்-மனைவி இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

 இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சங்கர்குரு மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர்களுடைய மகன், மகள் தங்கள் பாட்டி வீட்டுக்கு சென்று இருந்தனர். தொடர்ந்து நேற்று அதிகாலையில் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சங்கரேசுவரி, வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து சங்கர் குரு மீது ஊற்றி தீ வைத்தார். அப்போது வீட்டிலும் தீப்பற்றியது. தீயில் கருகி வலி தாங்க முடியாமல் அலறி துடித்த சங்கர்குரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதற்கிடையே  வீடு முழுவதும்  தீ  பரவி அருகில் இருந்த வீட்டுக்கும் பரவியது. இதில் மேலும் 2 குடிசை வீடுகளும் சேதம் அடைந்து இடிந்து விழுந்தன. அந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கணவனை எரித்துக்கொன்ற சங்கரேசுவரி, விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். கருகிக்கிடந்த சங்கர்குரு உடலை மீட்டு பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *