• October 28, 2026

இளையரசனேந்தல் அரசு பள்ளி மேலாண்மைக் குழு  பதவி ஏற்பு

 இளையரசனேந்தல் அரசு பள்ளி மேலாண்மைக் குழு  பதவி ஏற்பு

கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு  பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

தலைமை ஆசிரியர் மரிய செல்வி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் முருகசரஸ்வதி அனைவரையும் வரவேற்றார

2026-2028 ஆண்டிற்கான தலைவர் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர்  தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் உட்பட உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்,

இரண்டு வருடங்களுக்கான பள்ளியின் வளர்ச்சிக்கு இக்குழுவின் பொறுப்புகளும் செயல்களும்  அறிவுறுத்தப்பட்டன.  பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர் உறுப்பினர் முதுகலை ஆசிரியர் பாரதியுடன் இணைந்து அனைத்து ஆசிரியர்களும் இந்த நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளை  செய்திருந்தனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *