காமநாயக்கன்பட்டியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு இயக்கம்
மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி ஆகஸ்ட் 17 முதல் நவம்பர் 18 ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்று வருகிறது.
அதன்படி வடக்கு வண்டானம் கிராமத்தில் அமைந்துள்ள பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் சார்பில் கோவில்பட்டியை அடுத்த காமநாயக்கன்பட்டி பஸ் நிலையத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நிகழ்ச்சியில் பவர்கிரிட் துணைபொது மேலாளர் சு.ராஜசேகரன், துணை மேலாளர் க.கார்த்திக் மற்றும் பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை பஸ் நிலையம் வந்த பயணிகள், அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணாக்கர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
நேர்மை, வெளிப்படைத் தன்மை, ஊழலற்ற நிர்வாகத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.







