• October 30, 2026

போக்சோ வழக்கில் கைதான வருக்கு  7 வருட சிறை தண்டனை 

 போக்சோ வழக்கில் கைதான வருக்கு  7 வருட சிறை தண்டனை 

Oplus_16908288

கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டி வடக்கு புதுகிராமம் பகுதியைச் சேர்ந்த  ரவிசங்கர் (57/26) என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இவ்வழக்கின் விசாரணை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி முருகன் நேற்று (29.10.2026) தீர்ப்பு வழங்கினார்.

ரவிசங்கரை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 7 வருட சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,500/- அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவிட்டார். 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *