தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் -ஒழுங்கு சீர்குலைந்துள்ளது ; கனிமொழி எம்.பி.
திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம். பி. தனது எக்ஸ் (வளைதளம்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
“நேற்றைய தினம் தூத்துக்குடி கந்தன் காலனியில், வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்ற பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நான்கு நாட்களில் ஏழு கொலைகள் எனத் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து, பொதுமக்கள் கடுமையான அச்சத்தில் உறைந்துள்ளனர்.

‘முத்துநகரம்’ என்று அன்போடு அழைக்கப்படும் தூத்துக்குடியை, ‘கொலை நகரம்’ என்று அழைக்கும் நிலைக்குத் தவெக அரசு தள்ளியுள்ளது.
மீண்டும் சொல்கிறேன்… முதலமைச்சர் விஜய்; பொதுமக்கள் மீது கருணை காட்டி, காவல்துறையைச் சரியாக நிர்வகிக்கத் தெரிந்த ஒருவரிடம் அதன் பொறுப்பை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்!”
இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார்







