• October 31, 2026

மதுரையில் தீப்பிடித்து எரிந்த கார்

 மதுரையில் தீப்பிடித்து எரிந்த கார்

 திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ் (வயது 37), பாரதி (வயது 38), பிரகாஷ் (வயது 38), கிருஷ்ணன் (வயது 35). நண்பர்களான இவர்கள் 4 பேரும் மதுரை பாண்டிகோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக காரில் உடுமலைப்பேட்டையில் இருந்து மதுரை நோக்கி வந்தனர். காரை கிருஷ்ணன் ஓட்டி வந்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் நான்கு வழிச்சாலையில் வந்தபோது, திடீரென்று காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் அதிக அளவில் புகை வெளியேறியதால் சுதாரித்துக்கொண்ட  கிருஷ்ணன், தோப்பூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையின் ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு அனைவரையும் கீழே இறங்க செய்தார்.

இதற்கிடையே காரில் தீப்பற்றி  மளமளவென எரிய தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது,. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பரங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால் கார் முழுவதும் எரிந்து அதில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன.

இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *