தேசிய ஜூனியர் ஆக்கி அணி தேர்வு பயிற்சி முகாம்: கோவில்பட்டி வீரர், வீராங்கனைகள் 4 பேர் பங்கேற்கிறார்கள்
கடந்த ஆகஸ்ட் மாதம் கோயமுத்தூரில் நடைபெற்ற தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் 45 பேர் இந்திய அணிக்கு தேர்வு செய்வதற்கான பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து 3 வீரர்கள் இந்திய ஆக்கி அணியின் பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த 3 வீரர்களும் கோவில்பட்டியில் உள்ள சிறப்பு விளையாட்டு விடுதி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ் எஸ் துரைசாமி மாரியம்மாள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு விளையாட்டுத்துறை மாணவர் கே. கௌதம் முதலாம் ஆண்டு விளையாட்டு துறை மாணவர் டி.கவுதம் ,கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவர் ராகுல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் பெண்கள் ஆக்கி போட்டியில் இருந்து சிறப்பாக விளையாடிய வீராங்கனைகள்,இந்திய ஜூனியர் பெண்கள் அணிக்கு பயிற்சி முகாமிற்கு தேர்வு செயப்பட்டனர்.
இதில் கோவில்பட்டியை சேர்ந்த புதுக்கோட்டை விளையாட்டு விடுதியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் வீராங்கனை ஹரிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார் நவம்பர் 12 ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் பயிற்சி முகாமிற்கு கலந்து கொள்ள 4 வீரர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்
தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களை ஆக்கி இந்தியாவின் பொருளாளரும் ஆக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு சங்கத்தின் தலைவருமான சேகர் ஜெ. மனோகரன், பொதுச் செயலாளர் செந்தில் ராஜ்குமார், பொருளாளர் சேவியர் ஜோதி சற்குணம், தேர்வு குழு தலைவர் குரு சித்ர சண்முக பாரதி, முன்னாள் இந்திய ஆ க்கி வீரர் திருமாவளவன் ஆகியோர் பாராட்டினார்கள்.

மேலும் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அதிகாரி ரத்தின ராஜா, சிறப்பு விளையாட்டு விடுதி மேலாளர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் ஹாக்கி பயிற்சியாளர் முத்துக்குமார் ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமை நாயகம், பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா, வேல்ஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் நாகமுத்து, யூ. பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பரமசிவம் , கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சங்கர நாராயணன் மூத்த ஆக்கி வீரர்கள் புகழேந்தி தனசேகர்,காளிதாஸ், மணிவண்ணன், மனோஜ் குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி சுரேஷ்குமார் திருச்செல்வம் சுரேந்தர் முருகன் வேல்முருகன் மாயாண்டி ஆகியோர் வீரர்களை பாராட்டி வாழ்த்தினார்கள்







