• October 31, 2026

தவெக ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர்; மு.க.ஸ்டாலின்

 தவெக ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர்; மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு, கொலை – கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறி பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க மகளிர் அணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடெங்கும் இன்று தி.மு.க மகளிர் அணியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சி சார்பற்ற மகளிரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பெண்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். விலைவாசி ஏற்றத்தால் ஏழை மக்கள் விக்கித்து நிற்கிறார்கள்.

போதாக் குறைக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளை வீட்டுக்கு வெளியே விளையாட விடவே அச்சப்படும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதையும் அவர்கள் செய்திகளில் தினம்தினம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

விமர்சனம் செய்வோரை வேட்டையாடுவதிலும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் ஷோ காட்டுவதிலும் முதலமைச்சருக்கு இருக்கும் கவனம் ஆட்சி நிர்வாகத்திலும் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியைத் தமிழ்நாட்டுப் பெண்கள் அடித்துவிட்டனர்.

அவர்களின் #WakeUpCall-க்குச் செவிசாய்ப்பது அரசின் கடமை

இவ்வாறு மு.க.ஸ்டாலின்  பதிவிட்டுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *