தூத்துக்குடி மாவட்டத்தில் 2 ந்தேதி முதல் தொழுநோய் கண்டறியும் முகாம்
தொழு நோய் கண்டறியும் முகாம் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் வீடு வீடாகச் சென்று தொழுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.
நவம்பர் 2 முதல் 14 நாள்கள் முதல் கட்டமாக இந்த முகாம் நடக்கிறது,. அடுத்து இரண்டாம் கட்டமாக டிசம்பர் 2ந்தேதி முதல் 14 நாட்கள் நடைபெறும்.
மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

முகாமின்போது, மருத்துவப் பணியாளர்கள் வீடுகளுக்குச் சென்று தொழுநோயின் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். அறிகுறிகள் இருப்பதாகக் கண்டறியப்படுவோருக்கு மருத்துவப் பரிசோதனை செய்து, தேவையான சிகிச்சை வழங்கப்படும்.
தொழுநோய் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். அறிகுறிகள் இருந்தால் மருத்துவப் பரிசோதனை பெறத் தயங்க வேண்டாம். என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்,







