சிறப்பாக புலனாய்வு செய்த போலீசாருக்கு டி.ஐ.ஜி.பாராட்டு
திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் (டி.ஐ.ஜி.) இரா. திருநாவுக்கரசு, சிறப்பாக புலனாய்வு செய்த போலீசாரை இன்று (31.10.2026) சரக அலுவலகத்திற்கு நேரில் அழைத்துப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார். அவர்கள் விவரம் வருமாறு:-
*திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலைய கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுத்தர நீதிமன்ற பணியை சிறப்பாக மேற்கொண்ட தலைமைக் காவலர் க. செல்வி;
*தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய POCSO வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுத்தரச் சிறப்பாகப் புலனாய்வு செய்த காவல் ஆய்வாளர். வே. விஜயலட்சுமி; மற்றும் நீதிமன்றப் பணியை சிறப்பாக மேற்கொண்ட தலைமைக் காவலர். ஜே. ஸ்டெல்லா மேரி;

*தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போஸ்கோ வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத் தர நீதிமன்றப் பணியை சிறப்பாக மேற்கொண்ட தலைமைக் காவலர். இரா. அமுதா;
*திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய கூட்டுக் கொள்ளை வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுத்தரச் சிறப்பாகப் புலனாய்வு செய்த காவல் ஆய்வாளர். க.முருகன்;







